ADDED : செப் 15, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வபாலன், நவீன்குமார், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில், கல்லுாரி மாணவ, மாணவியர் காய்கறி, கீரைகளை மாலையாக அணிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரம் வினியோகித்து, ஊர்வலமாக சென்று துரித உணவை தவிர்த்து, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.