/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சல் போட்டியில் மாணவியர் உற்சாகம்
/
நீச்சல் போட்டியில் மாணவியர் உற்சாகம்
ADDED : செப் 12, 2024 11:18 PM

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம், ட்ரிக் நீச்சல் அகாடமியில், முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி, நடந்தது.
இப்போட்டிகளை மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பிரிவில், 118 பேர் பங்கேற்றனர்.
கல்லுாரியை விட, பள்ளி பிரிவில் அதிகளவில் (90 பேர்) பங்கேற்றிருந்தனர். முன்னதாக நீச்சல் போட்டி நடுவர்களாக ராஜா, இளங்கோ உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், பத்து பேர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
50 மீ., மற்றும், 200 மீ., ப்ரீஸ்டைல், பேக் ஸ்டோக், பிரண்ட் ஸ்டோக், பட்டர் பிளே ஸ்டோக், 400 மீ., ப்ரீஸ்டைல், 400 மீ., தனிநபர் மெடல் உள்ளிட்ட பிரிவுக்கு போட்டிகள் நடந்தது. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவர்கள், அடுத்த சுற்று போட்டி களுக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.