/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
/
அரசு கல்லுாரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
ADDED : மே 06, 2024 11:30 PM

திருப்பூர்;அரசு கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டினர். மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்கள், www.tngasa.in என்ற இணைய தளத்தில், முதல் விண்ணப்ப விபரங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அவிநாசி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இணைய வழி விண்ணப்பித்தலுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று, விண்ணப்பித்தனர்.