/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் குதுாகலம்
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் குதுாகலம்
ADDED : மே 12, 2024 01:36 AM

திருப்பூர், : நம்பியூர், குமுதா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவன் சரண், 500க்கு, 494 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி மேகவர்ஷினி, 491 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாமிடம்; மாணவி நந்திதா, 484 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். பாட வாரியாக, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில், மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய, 69 பேரும் தேர்ச்சி பெற்றனர்.இரு மாணவர்கள், 490 மதிப்பெண், 8 பேர், 480க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர். மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் உட்பட பலரும் மாணவர்களை பாராட்டினர்.