sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுத்தேர்வில் சாதித்துக்காட்ட மனமுருகி மாணவர்கள் வழிபாடு

/

பொதுத்தேர்வில் சாதித்துக்காட்ட மனமுருகி மாணவர்கள் வழிபாடு

பொதுத்தேர்வில் சாதித்துக்காட்ட மனமுருகி மாணவர்கள் வழிபாடு

பொதுத்தேர்வில் சாதித்துக்காட்ட மனமுருகி மாணவர்கள் வழிபாடு


ADDED : மார் 03, 2025 04:14 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர்,ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, 11ம் ஆண்டு ஹயக்ரீவர் வழிபாடு, கடந்த வாரம் துவங்கியது; பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, 2வது வழிபாடு நேற்று நடந்தது.

காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாற்றுமறை, மகாதீபாராதனை நடந்தது.

யாகவேள்வியில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திரம் பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.

பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கான சிறப்பு வழிபாடு, 9 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us