/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாணவர் சிகை அலங்காரம் முறைப்படுத்த வேண்டும்'
/
'மாணவர் சிகை அலங்காரம் முறைப்படுத்த வேண்டும்'
ADDED : ஜூலை 01, 2024 11:53 PM
திருப்பூர்;மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, ஒழுக்கமான சிகை அலங்காரத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டரிடம் அளித்த மனு:
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது. சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்தையும், பண்பையும் பின்பற்ற வேண்டியவர்கள். தங்கள் தலைமுடியை வெட்டி சிகை அலங்காரம் செய்வதில், ஒழுங்குமுறை தேவைப்படுகிறது.
தனியார் பள்ளி மாணவர்கள் ஒழுக்கமான சிகை அலங்காரத்துடன் இருப்பது போல், அரசு பள்ளி மாணவர்களையும் மாற்ற வேண்டும். முடி திருத்தம் செய்யும் நடைமுறையை ஒழுங்குபடுத்த வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தி, மாணவர்களை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் வழிகாட்ட வேண்டும்.
பள்ளி பருவத்தில் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பின்பற்றினால் மட்டுமே கல்லுாரி கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, அரசு பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரத்தை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.