/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 11:54 PM
உடுமலை:உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வியாண்டு துவங்கியதையொட்டி, புதிய மாணவர் வரவேற்பு விழா, சுற்றுச்சூழல் கருத்தரங்கம், மரக்கன்று நடும் விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். வேதியியல் ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார்.
நடப்பாண்டில் புதிதாக வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி பங்கேற்று, பிளாஸ்டிக் ஒழிப்பு, வன விலங்குகளை பாதுகாத்தல், மரக்கன்று நடுதல் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்களுக்கு வினாடிவினா போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற தலைப்பில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசிய பசுமைப்படை மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். தமிழாசிரியர் ரேணுகா நன்றி தெரிவித்தார்.
* மடத்துக்குளம் ஒன்றியம், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், முதல் நாள் வந்த மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் உற்சாகமளித்தனர்.
நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர், ஆசிரியர்களும் இவ்விழாவில் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.