/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களே... இன்று மிஸ் பண்ணாதீங்க! இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: அனுமதி இலவசம்
/
மாணவர்களே... இன்று மிஸ் பண்ணாதீங்க! இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: அனுமதி இலவசம்
மாணவர்களே... இன்று மிஸ் பண்ணாதீங்க! இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: அனுமதி இலவசம்
மாணவர்களே... இன்று மிஸ் பண்ணாதீங்க! இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி: அனுமதி இலவசம்
ADDED : ஜூலை 06, 2024 10:16 PM
'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூரில் இன்று நடக்கிறது. இன்ஜி., கவுன்சிலிங் தயாராகி வரும் மாணவ, மாணவியர் பங்கேற்று, பயன் பெறலாம்; இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
திருப்பூர், ஜூலை 7-
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் தங்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறை குறித்து 'தினமலர்' நாளிதழ் வழிகாட்டுகிறது.
இதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2024' என்ற நிகழ்ச்சியை, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.
அவ்வகையில், திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில், இன்று (7 ம் தேதி) இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றனர்.
காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், மாணவர்களுக்கான இன்ஜி., குறித்து விரிவான தகவல்களை வழங்குகின்றனர்.
மேலும் நிகழ்ச்சியில், இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், என்ன பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, வேலைவாய்ப்பு மிகுந்த இன்ஜி., பாடப்பிரிவு, ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறை என்ன, 'கட் ஆப்' மதிப்பெண் முக்கியத்துவம், தரவரிசை மற்றும் விருப்ப பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட தகவல்கள் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன், இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக அனைத்து சந்தேங்களுக்கும் பெற்றோர், மாணவ, மாணவியர் விளக்கம் பெறலாம். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.