/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு
/
தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு
ADDED : மே 11, 2024 12:19 AM

பல்லடம்;பல்லடம் அருகே நடந்த, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, வாகனங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு முகாம், ஆர்.டி.ஓ., தலைமையில், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி மற்றும் காங்கேயம் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 219 தனியார் பள்ளிகளை சார்ந்த, 1,291 வாகனங்கள் ஆய்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.
ஆய்வு குறித்து, திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்தன் கூறியதாவது:
பள்ளிகள் திறப்புக்கு முன்பாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, வாகனங்களின் உறுதி தன்னை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, வாகனங்களில் மஞ்சள் பெயின்ட், பள்ளியின் பெயர் முத்திரை, தொலைபேசி எண், டிரைவர் கேபின், கால் பலகை, தீ தடுப்பு உபகரணம், பக்கவாட்டு தடுப்புக் கம்பிகள், அவசர கால வழி, வேகத் தடுப்பு கருவி, ஹாரன் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரிவர உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
முகாமில், 800க்கும் அதிகமான வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. விடுபட்ட வாகனங்களுக்கான ஆய்வு அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.