/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்பராயன் கையிருப்பு ரூ.79,647 மட்டுமே சொத்தும் இல்லை; கடனும் இல்லையாம்!

ADDED : மார் 27, 2024 01:27 AM

திருப்பூர்;இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், தனது மனைவி பெயரில் மட்டும், 98.55 லட்சம் ரூபாய்க்கு சொத்தும், 1.50 லட்சம் நகைக்கடனும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக, 79 ஆயிரத்து, 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக, இரண்டு லட்சத்து, 78 ஆயிரத்து, 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக, 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாகனங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த, 2019 தேர்தலில், பூர்வீக வீடு, வேளாண் அல்லாத நிலங்கள் என, மனைவி பெயரில் மட்டும், 74.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் முன்னாள்எம்.பி., என்ற முறையில் கிடைக்கும் ஓய்வூதியமும், மனைவியின் ஓய்வூதியமும் மட்டுமே நிதி ஆதாரமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.