ADDED : மே 30, 2024 12:37 AM
பல்லடம் : பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, குன்னாங்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னான் மனைவி நாச்சம்மாள், 80. கூலித் தொழிலாளி.
நேற்று முன்தினம், கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலை, வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பீரோ உடைக்கப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது.
கரைப்புதுார், சென்னி மலைபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் பிரவீன்குமார், 27, பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று விட்டு மதிய உணவு இடைவேளையின் போது வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4.5 சவரன் தாலிக்கொடி திருடப்பட்டிருந்தன.
இத்திருட்டு சம்பவத்தின் போது பீரோவின் கண்ணாடி உடைபட்டு திருட்டு ஆசாமியின் கைகளை பதம் பார்த்ததில், வீடு முழுவதும் ரத்தம் சிந்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு நடந்தது குறித்து, பல்லடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.