ADDED : ஜூலை 02, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் வட்டார விவசாயிகள் கூறியதாவது:
நாட்டுக்கோழி வளர்க்க, 600 சதுர அடி இடம் இருந்தால், 250 குஞ்சுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க வாங்க, 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரிஜினல் நாட்டுக்கோழி குஞ்சுகளை பண்ணையில் வைத்து வளர்க்க முடியாது.
அவை ஒன்றுடன் ஒன்று கொத்திக் கொள்ளும். அரசு வழங்குவது பண்ணை நாட்டுக்கோழி குஞ்சுகள். இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. ஒரிஜினல் நாட்டுக்கோழி இன்றைய நிலையில் கிலோ, 550 முதல், 600 ரூபாய் வரை விலை போகிறது. பண்ணை நாட்டுக்கோழிகள், 300 ரூபாய்க்கும் குறைவாகவே விலை போகும். இதனால், பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாது. இத்திட்டமே ஒரு ஏமாற்று வேலை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.