/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை மின் நிலைய அலுவலகங்கள் சுல்தான்பேட்டையுடன் இணைப்பு
/
துணை மின் நிலைய அலுவலகங்கள் சுல்தான்பேட்டையுடன் இணைப்பு
துணை மின் நிலைய அலுவலகங்கள் சுல்தான்பேட்டையுடன் இணைப்பு
துணை மின் நிலைய அலுவலகங்கள் சுல்தான்பேட்டையுடன் இணைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:29 AM
பல்லடம்:பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள ஜல்லிப்பட்டி, சாலைப்புதுார் துணை மின் நிலைய அலுவலகங்கள், சுல்தான்பேட்டை உட்கோட்டத்துடன் இணைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி அறிக்கை:
பல்லடம் கோட்டத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி, சாலைப்புதுார் பிரிவு அலுவலகங்கள் மற்றும் 110/22 கிலோ வாட் சாலைப்புதுார் துணை மின் நிலையம் ஆகிய அலுவலகங்கள், நிர்வாக காரணங்களுக்காக பல்லடம் கோட்டத்தில் இருந்து, கோவை தெற்கு மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள, நெகமம் கோட்டம், சுல்தான்பேட்டை உட்கோட்டத்துடன் இணைக்கப்படுகிறது. 7ம் தேதி (இன்று) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. மேலும், ஜல்லிப்பட்டி, சாலைப்புதுார் பிரிவு அலுவலகங்களின் கீழ் உள்ள மின் நுகர்வோர், இன்று முதல் சுல்தான்பேட்டை துணை மின் நிலைய அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.