/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகள் திடீர் மாற்றம்
/
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகள் திடீர் மாற்றம்
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகள் திடீர் மாற்றம்
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகள் திடீர் மாற்றம்
ADDED : ஏப் 10, 2024 12:46 AM
உடுமலை;மடத்துக்குளம் தொகுதியில், வேட்பாளர் தாளாளராக உள்ள பள்ளியில் அமைந்திருந்த, மூன்று ஓட்டுச்சாவடிகள் மாற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். அவர், பள்ளி தாளாளராக உள்ள, கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில், மடத்துக்குளம் சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி எண், 232, 236 மற்றும் 237 ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது.
அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, ஓட்டுச்சாவடிகளை மாற்ற, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்திய தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்ததையடுத்து, கணியூர் பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு, மூன்று ஓட்டுச்சாவடிகளும் மாற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.