/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை கால தொற்று நோய் பரவல்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
கோடை கால தொற்று நோய் பரவல்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கோடை கால தொற்று நோய் பரவல்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கோடை கால தொற்று நோய் பரவல்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 04, 2025 07:11 PM
உடுமலை:
கோடை கால நோய்பரவலை தவிர்க்க, துவக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தற்போது கோடை காலம் வழக்கத்துக்கு முன்னதாக துவங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்தகோடை காலத்தில், குழந்தைகளுக்கு அம்மை உட்பட பல்வேறு தொற்றுநோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.
இதனால், வழக்கமாகவே குழந்தைகளுக்கு பள்ளிகளில் தண்ணீர் அருந்துவதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கொரோனாவுக்கு பின், சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் தொற்று ஏற்பட்டாலே பீதியை உண்டாக்குகிறது. இதனால் குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த, பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதி துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வதற்கும், அவர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கிராமங்களில், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாயிலாக, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நகரப்பகுதிகளிலும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தண்ணீர் அதிகமாக குடிப்பதற்கு, குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறோம். தொற்று பரவலால் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நாள்தோறும் விளக்குவதால், மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
பெற்றோருக்கு அடிக்கடி கூட்டம் போடப்பட்டு, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் உணவுகளை, பெற்றோர் குழந்தைகளுக்கு வாங்கித்தராமல் இருப்பதற்கும் அறிவுறுத்துகிறோம்.
பள்ளிகளிலும், குழந்தைகள் சிற்றுண்டியாக அத்தகைய உணவுகளை கொண்டு வருவதற்கு தடை செய்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
கோடை காலத்தில், ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை மாணவர்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.