/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை கால மல்பெரி பராமரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
கோடை கால மல்பெரி பராமரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
கோடை கால மல்பெரி பராமரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
கோடை கால மல்பெரி பராமரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 30, 2024 11:22 PM

உடுமலை:கோடை காலத்தில், மல்பெரி செடிகள் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேளாண் பல்கலை., வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில், தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவ்வகையில், மாணவர்கள், பரத்குமார், ஜெயமுருகன், லோகேஷ்குமார், மதன் ஆகியோர், பூளவாடி, பெரியபட்டி, சிந்திலுப்பு, வா.வேலுார், பெதப்பம்பட்டி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது, கோடை காலத்தில், பட்டுப்புழு வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மல்பெரி செடிகளை முறையாக பராமரித்து, புழு வளர்ப்பு மனையில், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிப்பதால், பட்டுக்கூடு உற்பத்தியை சீராக வைத்திருக்கலாம் என விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.
மேலும், மல்பெரி இலையில் மதிப்பு கூட்டு பொருட்கள் மற்றும் மல்பெரி கழிவுகளை பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிப்பு குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.