/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி
ADDED : மே 12, 2024 11:31 PM

உடுமலை:உடுமலை, பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
உடுமலை கொழுமம் ரோட்டிலுள்ள, பீஸ்லேண்ட் பிரம்ம குமாரிகள் இல்லத்தில், பள்ளி மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
குடிநீர் வடிகால் வாரியத்துறை பொறியாளர் ரங்கராஜ், பேராசிரியர் ரஜினி, வக்கீல் கீதாஞ்சலி முன்னிலை வகித்தனர். ராஜபோக தியான நிலைய பொறுப்பாசிரியர் மீனா, மாணவர்களுக்கு நினைவாற்றலை வளர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
மனநல மருத்துவர் கிருத்திகா மொபைல் போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு நினைவாற்றலை ஊக்குவிக்கும் விளையாட்டுகள், உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகள், நற்பண்புகளை வளர்க்கும் செயல்முறைகள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.