/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை பயன்பாடு அதிகரிப்பு மின் கட்டண செலவு 'விர்ர்...'
/
கோடை பயன்பாடு அதிகரிப்பு மின் கட்டண செலவு 'விர்ர்...'
கோடை பயன்பாடு அதிகரிப்பு மின் கட்டண செலவு 'விர்ர்...'
கோடை பயன்பாடு அதிகரிப்பு மின் கட்டண செலவு 'விர்ர்...'
ADDED : மே 11, 2024 12:08 AM
திருப்பூர்;கோடை காலத்தில், 'ஏசி', 'ஏர்கூலர்' மற்றும் மின்விசிறி பயன்பாடு அதிகரித்ததால், மின் கட்டண செலவும் திடீரென உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து, 45 நாட்களுக்கு மேலாக, வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வழக்கமாக அக்னிநட்சத்திர வெயில் காலத்தில் சுட்டெரிப்பது போல், கடந்த ஒரு மாதமாக அனல் வெப்பத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.
வெப்ப தாக்கம் அதிகரித்த காரணத்தால், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், 'ஏசி', 'ஏர்கூலர்' மற்றும் மின்விசிறிகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், மின் பயன்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது.
'ஏசி' மற்றும் 'ஏர்கூலர்', மின்விசிறிகள் பயன்பாடு, இருமடங்கு அதிகரித்த காரணத்தால், கடந்த மார்ச் - ஏப்., மாத மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 800 ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் வரும் வீடுகளில், 1,500க்கும் அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. ஏறத்தாழ, 50 சதவீதம் அளவுக்கு மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால், மின் கட்டணம் உயர்ந்துவிட்டதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதலங்களில், மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தவறான தகவல் பரவியுள்ளது. இதன்காரணமாக, மின் கட்டண உயர்வு முன்னறிவிப்பின்றி அமலுக்கு வந்ததால் தான், மின் கட்டணம் உயர்ந்துள்ளதா என்ற சந்தேகமும், குழப்பமும் அதிகரித்துள்ளது.
மின் கட்டணம்உயரவில்லை!
மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'வீடுகளுக்கு, 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம்; 101 முதல், 200 யூனிட் வரை, யூனிட்டுக்கு, 1.50 ரூபாய்; 201 முதல் 300 யூனிட் வரை, மூன்று ரூபாய்; 301 முதல் 400 யூனிட் வரை, நான்கு ரூபாய்; 401 முதல் 500 வரை ஐந்து ரூபாய்; 501 முதல் 6.80 பைசா என்று மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
மின்சார நுகர்வு அதிகரித்துள்ளதால், 500 யூனிட்டுக்கு மேல் அதிக மின் கட் டணம் வருகிறது. இதனால்தான், கடந்த மாதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மற்றபடி, மின் கட்டண உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. 'வாட்ஸ் ஆப்' தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்,' என்றனர்.