/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு கூடாது
/
கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு கூடாது
ADDED : மே 04, 2024 11:04 PM
திருப்பூர்:கோடை விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாதென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும், கோடை காலம் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்நாட்களில், மாணவர் சிறப்பு வகுப்பில் பங்கேற்க வேண்டுமென அழுத்தம் கொடுக்க கூடாது.
கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளி செயல்படவோ, சிறப்பு வகுப்பு நடத்தவோ கூடாதென, அனைத்து தனியார் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகார் எதுவும் பெறப்பட்டால், பள்ளியின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அங்கீகாரம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.