sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெயில் தாக்கம்; உடல் நலன் காப்பது எப்படி?

/

வெயில் தாக்கம்; உடல் நலன் காப்பது எப்படி?

வெயில் தாக்கம்; உடல் நலன் காப்பது எப்படி?

வெயில் தாக்கம்; உடல் நலன் காப்பது எப்படி?


ADDED : பிப் 23, 2025 02:26 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நீரிழப்பு, சிறுநீர் தொற்று, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைமருத்துவர்கள் கூறியதாவது:

கோடைக்காலம் என்றில்லை; அதிக வெப்பம் நிலவும் காலங்களில் நீரிழப்பு, சிறுநீர் தொற்று, அம்மை நோய், செரிமானப் பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி, சரும நோய்கள் என பல்வேறு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

முதியவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி வெப்பத்தாக்கு நோய் வரலாம். அதே போல் நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்குத் தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வெப்பம் அதிகமுள்ள காலங்களில் வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைத் தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். வெயிலால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் வரும்.

இவற்றை சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச் சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.

இருவேளை குளிக்கலாம்


காலை, இரவு என இரண்டு வேளையும் கட்டாயம் குளிக்கவேண்டும். பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது.

வெயில் அதிகரித்துள்ள நிலையில், வியர்வை அதிகம் சுரப்பதினால் சளி தொந்தரவு ஏற்படும். வியர்வை வந்தவுடன் அதனை உடனே துடைக்க வேண்டும். உடனே ஏசியில் போய் அமரக்கூடாது.

இக்காலக்கட்டத்தில் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடக்கூடாது, கூல்டிரிங்ஸ் குடிக்க கூடாது. கம்பங் கூழ், மோர், ராகி கூழ் குடிக்கலாம். மைதா உணவுகள், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. தீவிர உடற்பயிற்சி கண்டிப்பாக கூடாது. சிறுநீர் வந்தவுடன் உடனே கழிக்க செல்ல வேண்டும். அடக்கி வைத்தால் தொற்று ஏற்படும்.

மருத்துவமனைகள் தயார்

ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, திருப்பூர் அரசு மருத்துவமனையில், தேவையான அனைத்து மருத்துகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் அச்சம் அடைய வேண்டாம். சிகிச்சைக்கு தேவையான மருத்துவ கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு -சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ். குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us