/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுபயோகம் அருளும் சுந்தரமூர்த்தி விநாயகர் நினைத்த காரியம் கைகூட நவக்கிரஹ ரத்ன விநாயகர் குடும்ப சுபிட்சம் பெற குலால பிள்ளையார்

ADDED : செப் 07, 2024 12:35 AM

அவிநாசி அருகே திருப்பூர் ரோட்டில், அவிநாசிலிங்கம்பாளையம் ரோட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர். எட்டுதிக்கும் அஷ்டபாலகருடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. வீடு கட்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் உட்பட துவக்க நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் பலரும் பூஜை செய்த பின், பக்தர்கள் தங்களின் பணியை துவக்குவதை இன்றளவும் செய்து வருகின்றனர்.
கோவில் குருக்கள் விஸ்வநாத சிவம் கூறியதாவது:
சுந்தரமூர்த்தி நாயனார், திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் வழியில், இளைப்பாறி, அமுது உண்ட இடம் இந்த கோவில். கோவில் பின் நல்லாறு உள்ளது. அக்கரையில் தான் விநாயகர் இருந்தார். அங்கே அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் புளியோதரை சாப்பிட்டதாக ஐதீகம். இதன் காரணமாக சுந்தரமூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
கோவில் பிரகாரத்தில், அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர். ஈசனன், இந்திரன், அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு மற்றும் குபேரன் உள்ளனர். வீடு கட்டதுவங்கும் முன், இவரை வழிபட்டு துவங்கினால், எந்த தடங்கலும்வராது. கட்டடம் கட்டுமுன் செங்கலை வைத்து பூஜை செய்து, எடுத்து சென்று பணியை துவங்குகின்றனர். வீடு இல்லாதவர்கள் வேண்டினால், பிராத்தனை நிறைவேறுவதாக ஐதீகம்.