/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் சாகுபடிக்கு இடு பொருட்கள் வழங்கல்
/
மக்காச்சோளம் சாகுபடிக்கு இடு பொருட்கள் வழங்கல்
ADDED : ஆக 29, 2024 10:18 PM
உடுமலை : மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு, விதை, இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அறிவித்துள்ளது.
மக்காச்சோளம் சாகுபடி செய்ய தயாராகும் விவசாயிகள், உடுமலை வேளாண் துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில் வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் செயல் விளக்கத்திடலாக அமைக்க மானியத்தில் வழங்கப்படுகிறது.
இங்கு, சி.ஓ.எச்.எம்., - 8 மற்றும் பயோ சீடு ஆகிய இரு ரகங்கள் இருப்பு உள்ளது. செயல் விளக்கத்திடலாக அமைக்க ஒரு விவசாயிக்கு, 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு, 10 கிலோ மக்காச்சோள விதையும், திரவ உயிர் உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஒரு லிட்டர், நானோயூரியா, அரை லிட்டர், இயற்கை உரக்கரைசலும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், மானுப்பட்டி, குருவப்பநாயக்கனூர், கல்லாபுரம், சின்ன குமாரபாளையம், ஜல்லி பட்டி, வெங்கிட்டாபுரம், லிங்கமாவூர், தளி, திருமூர்த்தி நகர், தென் பூதிநத்தம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும், இத்திட்டத்தின் கீழ், விதைகள், இடு பொருட்கள் வழங்கப்படுகிறது.
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விதைகள் வழங்கப்படும். இதற்கு, கம்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை நகல், பேங்க் பாஸ்புக் முன்பக்க நகல், கூட்டு சிட்டாவாக இருந்தால் உரிமைச்சான்று ஆகியவற்றுடன், துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு வந்து பெற்றுச்செல்லலாம்.
மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.