n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. ராஜகோபுர கலசம் நிறுவுதல் - காலை 10:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - மதியம் 12:00 மணி. ஐந்தாம் கால யாக பூஜை - மாலை 5:30 மணி. மூல விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - மாலை 6:30 மணி.
n ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், சாமளாபுரம், பல்லடம். அனைத்து விக்ரகங்களுக்கும் திருமஞ்சனம், இரண்டாம் கால யாக பூஜை - காலை 8:00 மணி முதல். துவார தோரண பூஜை, பூர்ணாகுதி - மாலை 5:00 மணி முதல்.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர், ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் கோவில், காடையூர், காங்கயம். விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - காலை 8:30 மணி. புண்யாகம், ஐந்தாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி. வண்ணமயில் வள்ளி கும்மியாட்டம் - இரவு 7:30 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 10:30 மணி.
n செல்வ விநாயகர் கோவில், கே.பி.பி., கார்டன், கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, பரிவார தெய்வங்களுக்கு மூல மந்திர ேஹாமம் - காலை 9:00 மணி. கோபுர கலசம் நிலை நிறுத்துதல் - மாலை 6:30 மணி.
n பெரியநாச்சியம்மன் கோவில், உப்பிலிபாளையம், கருவலுார். திருப்பள்ளியெழுச்சி - காலை 5:30 மணி. திருக்குறிப்புத் திருமஞ்சனம் - 8:00 மணி. திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, எண் வகை மருந்து சாற்றுதல் - 9:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, திரவியாகுதி, மலர் வழிபாடு - மாலை 6:00 மணி.
n கோட்டை ஸ்ரீ வீரமாத்தி காளியம்மன் கோவில், டூம்லைட் மைதானம், கோட்டைக்காடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 5:30 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 10:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
n ஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. இரவு 7:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அருகம்பாளையம், ஊத்துக்குளி. மாலை 6:00 மணி.
n ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரிய ஓலப்பாளையம், வடுகபாளையம், அவிநாசி. காலை 6:00 மணி.
சிறப்பு அபிேஷகம்
வளர்பிறை சஷ்டி சிறப்பு அபிேஷகம், சென்னி யாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. காலை 11:00 மணி.
n பொது n
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ஏ.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசிபாளையம் கொடுவாய். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பொதுக்குழு கூட்டம்
குறுமைய, மாவட்ட போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை, ஆண்டு பொதுக்குழு கூட்டம், பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், திருப்பூர். மதியம் 2:00 மணி.
ஆர்ப்பாட்டம்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை காப்பாற்ற நிதி ஒதுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம். காலை 10:30 மணி.
தேசிய கருத்தரங்கம்
'நேனோ பொருள் 2024' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம். காலை 10:00 மணி.