ஆன்மிகம்
சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். கால பைரவர் அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.
n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சிறப்பு அபிேஷகம், சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:30 மணி. மகா தீபாராதனை - இரவு 8:00 மணி.
n கைலாசநாதர் கோவில், அலகுமலை. தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி.
குண்டம் திருவிழா
ஆடிக்குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம்பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிேஷகம் - காலை 8:00 மணி. அம்மை அழைத்தல், திருக்கல்யாணம், அன்னதானம் - மாலை 6:00 மணி.
திருமுறை வகுப்பு
தேவார பண்ணிசையோடு திருமுறை பன்னிசை வகுப்பு, நால்வர் அரங்கம், டி.எம்.ஆர்., தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம். பங்கேற்பு: தஞ்சாவூர் தமிழ் பல்கலை பேராசிரியர் நல்லசிவம். மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். இரவு, 7:15 மணி.
கம்பன் விழா
ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பங்கேற்பு: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ராமசுப்ரமணியம். திருத்த புராண நுால் வெளியீடு - மாலை 5:00 மணி. 'கம்பன் காவியத்தில் நம்மை பெரிதும் பிரமிக்க வைப்பவர் ராமனே, வாலியே, ராவணனே' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.
குரு பூஜை விழா
பார்வதி திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம். மாலை 6:00 மணி.
முப்பெரும் விழா
சிவஞான பூஜை, சிவநுால் வெளியீடு, முப்பெரும் விழா, குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ரிடபக்கொடி ஏற்றுதல் - காலை 6:00 மணி. சிவநுால் வெளியீடு - காலை 11:00 மணி. மாகேஸ்வர பூஜை - மதியம் 1:00 மணி.
பண்பு பயிற்சி முகாம்
மாணவ, மாணவியருக்கான பண்பு பயிற்சி முகாம், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை வளாகம், திருமுருகன்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: சேவாபாரதி. காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை.
மருத்துவ முகாம்
பொது மருத்துவ முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருணைபாளையம், அவிநாசி. ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் ஏங்கர். காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
பாடல் ஒப்புவித்தல் போட்டி
பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி, அ.தி.ஈசுவரன் வளாகம், தேவாங்கர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை. காலை, 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மின்வாரிய அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு புதுார்பிரிவு, மாநகராட்சி அலுவலகம் முன், மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை. ஏற்பாடு: இ.கம்யூ., வேலம்பாளையம்.
n ஹிந்து கலாசாரத்தை அழிக்க நினைப்பவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம், குமரன் சிலை அருகில், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து பாரத் சேனா.
மக்கள் சந்திப்பு இயக்கம்
கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம், 15 வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு பகுதி. ஏற்பாடு: மா.கம்யூ., பொதுக்கூட்டம், சரளைக்காடு, திருப்பூர். மாலை 4:00 மணி முதல்.
n மிஷன் வீதி முதல் வெங்கடேஸ்வரா நகர் வரை, திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., காலை 9:00 மணி.
n விளையாட்டு n
மாரத்தான் போட்டி
கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, பெருமாநல்லுார். காலை, 7:00 மணி.
சதுரங்க போட்டி
மாவட்ட சதுரங்க போட்டி, ஏ.கே.ஆர்., அகாடமி, அணைப்புதுார், அவிநாசி. காலை 10:00 மணி.
கேரம் போட்டி
மாநில கேரம் போட்டி, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: முத்தம்மாள் அறக்கட்டளை. காலை, 10:00 மணி முதல்.
பில்லியர்ட்ஸ் போட்டி
மாநில ரேங்கிங் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமி, குலாலர் திருமண மண்டபம் அருகில், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன். காலை 10:00 மணி முதல்.