ஆன்மிகம்
சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை, முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். ஏற்பாடு: கிருத்திகை வழிபாட்டு குழு, இடுவாய் ஓம் சரவணா காவடிக்குழு. அபிேஷக பூஜை - மாலை 5:00 மணி. 'அறிந்து கொள்வோம் ஆன்மிகம்' எனும் தலைப்பில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 மணி. அலங்கார பூஜை, திருகிரிவல ஊர்வலம் - இரவு 7:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
குண்டம் திருவிழா
ஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். குண்டம் திறப்பு, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 7:00 மணி. குண்டத்துக்கு அக்னி இடுதல், செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரம் - இரவு 7:00 மணி. அலகு எடுத்து ஆடுதல், அன்னதானம் - இரவு 8:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மரக்கன்று நடும் விழா
அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாச்சிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.
ஆண்டு பொதுக்குழு
அமர்ஜோதி கார்டன், ஏ.எஸ்., நகர் எக்ஸ்டன்சன், திருப்பூர். ஏற்பாடு: வெற்றி அமைப்பு. மாலை 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ஏற்பாடு: இந்திய கம்யூ., புதிய பஸ் ஸ்டாண்ட் முன், பி.என்., ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.
* மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ., மாலை 5:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
விளையாட்டு
கேரம் போட்டி
மாநில கேரம் போட்டி, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: முத்தம்மாள் அறக்கட்டளை. காலை, 10:00 மணி முதல்.
பில்லியர்ட்ஸ் போட்டி
மாநில ரேக்கிங் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமி, குலாலர் திருமண மண்டபம் அருகில், லட்சுமி நகர், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன். காலை 10:00 மணி முதல்.