sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஆக 04, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி, அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். 'மங்கல நாதமும் வழிபாடும்' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - மாலை 5:00 மணி. திருப்பாம்பரம் சகோதரர்கள், மன்னார்குடி வாசுதேவன், ராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

அமாவாசை சிறப்பு வழிபாடு

ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். அம்மனுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:30 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:30 மணி. அன்னதானம் - 1:00 மணி.

* ஸ்ரீ விநாயகர், கருப்பராயன், கன்னிமார், முனியப்பன், தன்னாசியப்பன் கோவில், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. உச்சி பூஜை - மதியம் 12:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், சுதந்திரநல்லுார், அவிநாசி. சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி.

மூலமந்திர லட்ச ேஹாமம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிராதேவிக்கு, மூலமந்திர லட்ச ேஹாமம், ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். பூவோடு, பால்குட ஊர்வலம் - காலை 8:00 மணி. ஸ்ரீ மஹா கணபதி பூஜை, மஹா சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமார்ச்சனை, நிகுல்பலா ேஹாமம், தீபாராதனை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

அன்னதானம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம், விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில் முன், திருப்பூர். ஏற்பாடு: எண்ணான்கு அறங்கள் தர்மபரிபாலன அறக்கட்டளை. காலை 10:00 மணி முதல்.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

மரக்கன்று நடும் விழா

ஒரத்துப்பாளையம் அணை, தம்புரெட்டிபாளையம், காங்கயம். ஏற்பாடு: வனத்துக்குள் திருப்பூர், காங்கயம் துளிகள். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை 9:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

சிறப்பு விற்பனை

துவக்க விழா கொண்டாட்ட சிறப்பு விற்பனை, எம்.ஜி.பி., சுப்ரீம், முனிசிபல் ஆபீஸ் வீதி, வளர்மதி பஸ் ஸ்டாப், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

விளையாட்டு

சதுரங்க போட்டி

மாவட்ட ஜூனியர் சதுரங்க போட்டி, 'டெயின்ட்ரீ' பப்ளிக் பள்ளி, லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சதுரங்க அசோசியேஷன். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us