ஆன்மிகம்
சிறப்பு பூஜை
அமாவாசை சிறப்பு பூஜைஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். சிறப்பு வழிபாடு - காலை 10:30 மணி. மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - மதியம் 12:30 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ முனியப்பன் கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. அமாவாசை பூஜை - மதியம் 1:00 மணி.
கும்பாபிேஷக ஆண்டு விழா
கருணை இல்ல வளாகம், இடைக்காடர் சித்தர் பீடம், ராயல் சிட்டி, அமராவதிபாளையம். கணபதி பூஜை, பஞ்சகவ்யம், பூர்ணாகுதி - அதிகாலை 5:30 மணி. அபிேஷகம், சிறப்பு அலங்காரம், அன்னதானம் - காலை 7:15 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு கடன் முகாம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டுக் கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.
பெயர் பலகை திறப்பு விழா
வெங்கடாசலம் நினைவு வனம், இளைஞர் நற்பணி மன்ற கலையரங்க பெயர் பலகை திறப்பு விழா, மகிழ்வனம் தாவரவியல் பூங்கா, சங்கோதிபாளையம், கோடங்கிபாளையம், காரணம்பேட்டை. மாலை 5:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
ஆலோசனை கூட்டம்
கொங்கு நகர் பகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட அலுவலகம், ராஜாராவ் வீதி, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 9:00 மணி.
விளையாட்டு
வாலிபால் போட்டி
வடக்கு குறுமைய மாணவியர் வாலிபால் போட்டி, ஜெய்சாராதா மெட்ரிக் பள்ளி, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.