sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 13, 2024 11:56 PM

Google News

ADDED : செப் 13, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

புரட்டாசி திருவிழா

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர். மகா அபிேஷகம், திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:30 மணி. பசூர் கோதண்டராமர் கோவில் பஜனை குழுவினரின் இசைக்கச்சேரி - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ஏகாதசி சிறப்பு பூஜை

வரதராஜ சுவாமி கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சுக்ல பச்ச ஏகாதசி, திருமஞ்சனம் - காலை 6:00 மணி. திருவோண விரத பூஜை - மாலை 6:00 மணி.

ஆண்டு விழா

பதிநான்காம் ஆண்டு விழா, பெரியநாயகி உட னமர், ஸ்ரீ கைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை, காலை, 9:00 மணி முதல்.

பொங்கல் விழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சென்னிமலைபாளையம், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி. மாவிளக்கு பூஜை - காலை 8:00 மணி. பொங்கல் திருவிழா - மதியம் 12:00 மணி. கலைநிகழ்ச்சிகள் - இரவு 8:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், பரிவார தெய்வங்கள் மற்றும் மூலஸ்தானம் யாகசாலைக்கு அழைத்து வருதல் - மாலை 4:00 மணி. முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி - இரவு 8:00 மணி. வள்ளிகும்மியாட்டம், ஒயிலாட்டம் - இரவு 8:00 மணி.

l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - காலை 8:30 மணி. மூன்றாம் கால யாக பூஜை, மண்டபார்ச்சனை, பூர்ணாகுதி - மாலை 5:30 மணி.

l ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி - காலை 7:00 மணி. யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - மதியம் 12:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, மகா தீபாராதனை - மாலை 5:00 மணி.

l ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்திநகர், பொங்கலுார். விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம் - மாலை 5:00 மணி. கோபுர விமான கலசம் வைத்தல், யந்திர பிரதிஷ்டை - இரவு 9:00 மணி.

l ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை, சாத்துமுறை வேதபாராயணம் - காலை 6:00 மணி. பிம்பசுத்தி திருமஞ்சனம் - 11:30 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூன்றாம் கால பூஜை ேஹாமம், பூர்ணாகுதி - மாலை 4:30 மணி.

l விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. விமான கலசம் நிறுவுதல் - காலை 8:15 மணி. இரண்டாம் கால பூஜை - காலை 10:00 மணி. மூன்றாம் கால பூஜை, பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி. ஆதார பீடத்தில் எண்வகை மருந்து சாற்றுதல் - இரவு 8:00 மணி.

n பொது n

மாவட்ட மாநாடு

தேவாங்கர் திருமண மண்டபம், மேற்குரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: சத்துணவு ஊழியர் சங்கம். காலை 11:00 மணி.

துவக்க விழா

'லோக்அதாலத்' சிறப்பு கோர்ட் துவக்க விழா, அறை எண் 301, நான்காவது தளம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர். காலை, 9:00 மணி.

சிறப்பு முகாம்

'நான் முதல்வன் - உயர்வுக்குப்படி' சிறப்பு முகாம், அரசு கலை அறிவியல் கல்லுாரி, தாராபுரம். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 9:00 மணி.






      Dinamalar
      Follow us