sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்!   ரசிகர்கள் பேரார்வம்

/

'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்!   ரசிகர்கள் பேரார்வம்

'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்!   ரசிகர்கள் பேரார்வம்

'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்!   ரசிகர்கள் பேரார்வம்


ADDED : ஜூன் 01, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பேரார்வத்துடன் டி20 உலக கோப்பை தொடருக்காக காத்திருக்கின்றனர். இத்தொடர் இன்று துவங்கி, வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள இப்போட்டிகளில்,அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா அணிகளுடன் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் மோத உள்ளது. ''டி20 உலக கோப்பையை வென்று நம் அணி சாதிக்கும்'' என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர். ஒரு மாத கிரிக்கெட் திருவிழா குறித்து, திருப்பூர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள், இதோ...

மிடில் ஆர்டர் கைகொடுக்குமா?

பவித்ரன், புஷ்பா நகர்

இதுவரை அமெரிக்க மைதானங்களில் நம் அணி விளையாடியது குறைவு. ஆடுகளம், டாஸ் வெற்றிக்கு மிக முக்கியம். துவக்கத்தில் வேகமெடுக்கும் அணித்திறமை, 'மிடில் ஆர்டரில்' அவ்வப்போது சரிந்து விடுகிறது. தடுமாற்றம் இல்லாத 'மிடில் ஆர்டர்' அவசியம். தற்போதைய அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டர் விட, பவுலிங் ஆல்ரவுண்டர் அதிகமாக உள்ளனர்.

நான்கு சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால், வெற்றியை பெரும்பாலும் பந்துவீச்சு தீர்மானிக்குமென எதிர்பார்க்கலாம். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக, நடராஜன், ருத்ராஜ் கெய்க்வாட் சேர்த்திருக்கலாம். சரியான நேரத்தில் மிடில் ஆர்டர் கைகொடுத்தால், அதிக ரன்களை குவித்து, உலக கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைக்க முடியும்.

உச்சபட்ச ஸ்கோர் எட்டலாம்

வித்யா கீதா, கண்ணகி நகர்

லீக் போட்டிகளில் பாகிஸ்தானுடன் போட்டி மட்டுமே சற்று சிரமமானதாக இருக்கும். அயர்லாந்து, அமெரிக்கா, கனடாவுடன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் 'ரன்ரேட்' பெறுவது இந்திய அணிக்கு சுமையை குறைக்கும். ஐ.பி.எல்., போட்டியில் சிறப்பாக பணியாற்றாத ரோஹித் சர்மா, இந்தியா அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்க கட்டாயம் திறமை காட்டி அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்.

ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் திறமை நிருபிக்க சரியான ஆடுகளமாக இப்போட்டி அமையும். இருக்கும் அணிகளில் அதிகளவில் சீனியர் வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது. பேட்ஸ்மேன்கள் திறமை காட்டினால், இதுவரை எட்டாத அதிகபட்சம் ஸ்கோரை எட்டி சாதனை புரிய இம்முறை வாய்ப்புள்ளது.

சிறப்பாக ஆடினால் வெற்றி உறுதி

ஜெனீபர், கொங்கு நகர்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கே.கே.ஆர்.,) அணியில் இடம் பெற்ற ஸ்ரேயாஸ், பேட்டிங்கில் அசத்திய, ஐ.பி.எல்., கோப்பையை கைப்பற்றி, வெற்றிக்கு வித்திட்டார். ஆனால், அவரை அணிக்கு தேர்வு செய்யாதது பேட்டிங்கில் ஏமாற்றத்தையளிக்கிறது. கடந்த, 2007ல் பாகிஸ்தான் அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி டி-20 உலக கோப்பையை வென்றது. அதன் பின், ஏழு உலக கோப்பை போட்டிகளில், 11 ஆண்டுகளாக இந்தியா அணி கோப்பையை வெல்லாமல் உள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம். அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அணிக்கு வெற்றி நிச்சயம். அனுபவ, இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டால் கோப்பையை, தட்டி துாக்குவது உறுதி.

அதிக ரன்கள் எடுப்பது அவசியம்

சவுமியா, கொடிக்கம்பம், திருப்பூர்

புதிய ஆடுகளம் என்பதால், டாஸ் முதல் கடைசி ஓவர், கடைசி பந்து வரை கணிப்பு, திட்டமிடல் அவசியம். சில வேகப்பந்து வீச்சுக்கும், மற்றவை சுழற்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கலாம். இரண்டு சூழலுக்கு ஏற்ற வகையில், வீரர்கள் முக்கியம். திறமை காட்டக்கூடிய ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வு செய்திருக்கலாம். வெற்றிக்கு ஸ்கோர் மிக முக்கியம். முன்பே திட்டமிட்டு அதிக ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன், முடிந்த வரை பவுலர்களும் தயாராகியிருக்க வேண்டும். ரன் அதிகம் என்றாலே பாதி வெற்றி உறுதியாகிவிடும். சீனியர் வீரர்களாக உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி நிச்சயம் இந்திய அணிக்கு கோப்பையை வென்று தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

---

டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் திருப்பூர் ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.(செய்தி உள்ளே)

தடுமாற்றம், பதற்றம் கூடாது

லீக், சூப்பர் 8 சுற்றுகளில் எளிதாக வெற்றி பெறும் நம் அணி, காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தான் கடந்த ஆண்டுகளில் வெளியேறியுள்ளது. அடுத்த சுற்றுக்கு கட்டாயம் முன்னேறியாக வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது தான், வீரர்கள் தடுமாறுகின்றனர்; பதற்றமாகின்றனர்.மற்ற வகையில் அனைத்து வீரர்களுக்கு திறமைக்குரியவர்கள்; சிறப்பாகவே விளையாடுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். சூழலை சமாளிக்க கூடுதலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.ஐ.பி.எல்., போட்டிகளில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஒவ்வொரு இடங்களில் இறக்கப்படுகின்றனர். பந்து வீச அழைக்கப்படுகின்றனர். ஆனால், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவ்வாறு செய்ய வாய்ப்பு இல்லை. ஐ.பி.எல்., ரோல் வேறு; சர்வதேச கிரிக்கெட் ரோல் வேறு. - சபரிகவுதம், கிரிக்கெட் பயிற்சியாளர்



திட்டமிடல் அவசியம்

'டி20' போட்டிகளை பொறுத்தவரை அன்றைய நாளின் திறமையே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் திட்டமிடல் மிகச்சரியாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கிடைக்கும் விக்கெட், வெற்றியை மாற்றும். அதே நேரம், இக்கட்டான சூழலில் நிலைத்து நின்று, ரன் குவிக்க, கடைசி கட்ட பேஸ்ட்மேன்களும் தயாராக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் விதிமுறைக்கு உட்பட்டு, பொறுமையாக ஆடுவது இப்போட்டிகளில் சாத்தியமல்ல. உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து, திறமை காட்டி வரும், இங்கிலாந்து, ஆஸி., வெஸ்ட்இண்டீஸ் அணிகளுடானான போட்டி சவாலாக இருக்கும்.- இளங்கோ, மேலாளர், ஸ்கூல் ஆப் கிரிக்கெட், செட்டிபாளையம்








      Dinamalar
      Follow us