நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வீரபாண்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 37; இடுவம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயமடைந்த அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்னையா, கடன் பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.