/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென் மாநிலத்தில் ஆசிரியை முதலிடம்
/
தென் மாநிலத்தில் ஆசிரியை முதலிடம்
ADDED : ஜூலை 10, 2024 11:51 PM

திருப்பூர் : ம.பி., மாநிலம், குவாலியரில், என்.சி.சி., அலுவலர்களுக்கான தேசிய பயிற்சி முகாம், ராணுவப்பிரிவு அலுவலகத்தில், மே 16 முதல் ஜூன், 29 வரை நடந்தது. இதில், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சந்திரா பங்கேற்றார்.
ஒன்றரை மாதம் நடந்த பயிற்சியில் 'மேப் ரீடிங்', துப்பாக்கி சுடுதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாம் நிறைவில், ஆசிரியர் சந்திரா எழுத்துத்தேர்வில் தேசிய அளவில் 5வது இடமும், தென்மாநில அளவில் முதலிடமும் பெற்றார். பயிற்சிக்குப் பிறகு 'பாஸிங் அவுட்' அணிவகுப்பில், துணை என்.சி.சி., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பயிற்சி முடித்து திருப்பூர் திரும்பிய ஆசிரியரை, கோவை, மகளிர் பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் ஜோஷி, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உள்ளிட்டோர் பாராட்டினர்.