ADDED : மே 29, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தாராபுரத்தில், மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கரூர் ரோட்டில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அங்கிருந்த பேக்கரி அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர்.
அவிநாசியில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த சபிலாகுமார், 27 என்பது தெரிந்தது. வாலிபரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.