ADDED : ஆக 01, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : திருமுருகன்பூண்டி, துரைசாமி நகரை சேர்ந்தவர் விஜய், 29. இவரது நண்பர் காஜா உசேன், 35, காஜா உசேன், அவசர தேவைக்காக தனது காரை விஜயிடம் அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
காஜா உசேன், கடனை திருப்பி கொடுக்கவில்லை. காஜா உசேன், தன்னிடம் வேலை பார்த்த கும்பகோணத்தை சேர்ந்த சமீர், 39, என்பவர் மூலம் விஜயிடம் இருந்து, காரை எடுத்து வர திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சமீர், காரை திருடி சென்று காஜா உசேனிடம் கொடுத்துள்ளார். இது குறித்து, விஜய், திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த சமீரை, போலீசார் நேற்று கைது செய்து, காரை மீட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.