/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோவில் வேலி சேதம்; பின்னணியில் சதித்திட்டம்'
/
'கோவில் வேலி சேதம்; பின்னணியில் சதித்திட்டம்'
ADDED : ஆக 06, 2024 06:41 AM

திருப்பூர்: அவிநாசி தாலுகா, ஈட்டி வீரம்பாளையம் கிராமம், அறிவொளி நகரில், 300 ஆண்டுகள் பழமையான செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. கிரிவலம் செல்லும் பாதையும் உள்ளது. இதற்கிடையே ஒரு தரப்பினர் கோவில் வளாகத்துக்குள் நுழைந்து, கம்பி வேலியை சேதப்படுத்தி குடிசை அமைக்க முயற்சித்துள்ளனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலையீட்டால், தடுத்து நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஈட்டிவீரம்பாளையம் பொதுமக்கள், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளுடன் வந்து, நேற்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
ஹிந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் கூறியதாவது: அமைதியாக வழிபாடு நடந்து வரும் இடத்தில், அத்துமீறி நுழைந்து, குடிசை அமைக்க மற்றொரு மதத்தினர் முயற்சிக்கின்றனர். கோவில் சுற்று வேலியை சேதப் படுத்தி, 'பி.சி.ஆர்.,' கேஸ் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவோம்' என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். கோவிலுக்கும், பக்தர் களுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன், திட்டமிட்ட மதமோதல்களை உருவாக்கும் சதித்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இங்கு இலங்கைத் தமிழர்களுக்கு இடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்படுமென, கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.