ADDED : மார் 10, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் அருகேயுள்ள மயில்ரங்கம் கிராமத்தில், பழம்பெருமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் நடந்து 45 ஆண்டுகளாகிறது.
கும்பாபிேஷகம் நடத்த நீண்ட போராட்டத்துக்குப் பின் அனுமதி கிடைத்துள்ளது. கோவில் வளாகம் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கோவில் வளாகம் துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, அறநிலையத் துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.