/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து
/
பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜூன் 13, 2024 11:56 PM

திருப்பூர் : திருப்பூரில், பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போயின.
திருப்பூர், குமார் நகரை சேர்ந்தவர் சந்திர சேகர், 40. இவருக்கு சொந்தமான இடம் ஏ.பி.டி., ரோடு சூரியன் நகரில் உள்ளது. அங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. குமார், 38 மற்றும் நடேசன், 40 ஆகியோர் வாடகைக்கு எடுத்து, ெஷட் அமைத்து வேஸ்ட் குடோன் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த பொதுமக்கள், இருவருக்கும் தகவல் கொடுத்தனர். பின், திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கு பரவி எரிய ஆரம்பித்தது. இதனால், அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், மேற்கூரை முழுவதும் மற்றும் துணிகள் என, அனைத்தும் எரிந்து போனது. தீ விபத்துக்கு காரணம் மின் கசிவாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.