ADDED : ஜூன் 01, 2026 04:00 PM

அ நிறம் | அளவு
திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 237 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மருத்துவர் குழுவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். ஆண், பெண் மருத்துவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு மற்றும் சத்துக் குறைபாடுகள் உள்ளதா எனப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
–––
ஆலாங்காடு, தெற்கு தோட்டம் பகுதி குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
