/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலை லாபகரமாக மாற்றும் '5எஸ்' வழிமுறை
/
தொழிலை லாபகரமாக மாற்றும் '5எஸ்' வழிமுறை
ADDED : மார் 10, 2025 12:51 AM
திருப்பூர்; திருப்பூர் திறமை ஏற்றுமதி அலுவலர்கள் சங்கம் (டீசா) சார்பில், '5 எஸ்' வழிமுறைகளை பயன்படுத்தி தொழிலை லாபகரமாக மாற்றுவது குறித்த இலவச பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
பயிற்சி பட்டறைக்கு, சங்கத் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். 'ரீனா இந்தியா' மேலாளர் நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில் வர்த்தக பயிற்சியாளர் பரமசிவம், '5எஸ்' வழிமுறைகள் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
'5 எஸ்' என்பது ஜப்பானிய வழிமுறை; அவ்வழிமுறையை சரியாக பயன்படுத்தினால், தொழிலை லாபகரமாக கொண்டு செல்ல முடியும். விற்பனையாளர் சந்தை என்ற நிலைமாறி, வாங்குபவர்கள் சந்தை என்ற வகையில் சூழல் மாறிவிட்டது.
தொழில் போட்டியும் அதிகரித்துள்ளதால், லாபம் குறைந்துவிட்டது; தொழில் முனைவோர், தங்களின் நிறுவனங்களில், ஜப்பானிய வழிமுறையான '5 எஸ்' வழிமுறையை பயன்படுத்தலாம். தேவையற்ற செலவு குறைப்பு, சிறந்த தரம், சரியான நேரத்தில் சேவை அளிப்பு, தொடர்ச்சியான கட்டமைப்பு மூலமாக மட்டுமே லாபம் அதிகரிக்கும்; புதிய ஆர்டரும் கிடைக்கும்.
தேவையற்றதில் இருந்து தேவையானவற்றை பிரித்து எடுக்க வேண்டும்; 5'எஸ்' வழிமுறை திருப்பூர் நிறுவனங்கள் பின்பற்றினால், விரைவாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் என்ற இலக்கை அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.