/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்
/
காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்
ADDED : ஆக 14, 2024 01:07 AM
திருப்பூர்;பல்லடத்தில் சுற்றி திரிந்த பீகார் சிறுவனை, திருப்பூர் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்த நிலையில், சிறுவன் தப்பியோடினார்.
பல்லடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆதித், 11 என்பது தெரிந்தது.
மற்ற விபரங்கள் குறித்து தெரியவில்லை. இதனால், சிறுவனை, திருப்பூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள 'டிஸ்சோ' குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.
கடந்த, 9ம் தேதி காப்பகத்தில் காவலாளி இல்லாத நேரத்தில், அங்கிருந்த சைக்கிளை எடுத்து தப்பி சென்றார்.
சிறுவன் மாயமானது குறித்து காப்பகம் நிர்வாகிகளுக்கு தெரியவர, 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டனர். சிறுவன் தப்பி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.