/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி உடுமலையில் 13ல் நடக்கிறது
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி உடுமலையில் 13ல் நடக்கிறது
ADDED : மே 10, 2024 11:04 PM
உடுமலை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்லுாரி கனவு நிகழ்ச்சி வரும் 13ம் தேதி உடுமலையில் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், தங்களின் உயர்கல்வி குறித்து தகவல்களை அறிந்து கொள்ள, பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வியாளர்களை கொண்டு, கல்லுாரி கனவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டில், இந்நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. வரும் 13ம் தேதி, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி மாணவர்களுக்கு, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரியிலும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், பல்வேறு துறைகளைச்சேர்ந்த அரசு அலுவலர்கள், துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று உயர்கல்வி தொடர்பான விளக்கமளிக்கின்றனர்.
மேலும், உயர்கல்வி வாய்ப்புகள், எதிர்காலத்தில் எந்தந்த துறைகளில் வேலைவாய்ப்புகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மாணவ, மாணவியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வழங்கவுள்ளனர்.
மேலும், உயர்கல்வியில், சேரும் மாணவர்களுக்கான கல்விக்கடன், பெறுவதற்கான வழிமுறைகளும், வங்கி மேலாளர்கள் வழங்கவுள்ளனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், '' திருப்பூர் மாவட்டத்தில், 23,242 மாணவ, மாணவியர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில கல்லுாரி கனவு நிகழ்ச்சிநடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,'' என்றார்.