/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி திருப்பூரில் நாளை நடக்கிறது
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சி திருப்பூரில் நாளை நடக்கிறது
கல்லுாரி கனவு நிகழ்ச்சி திருப்பூரில் நாளை நடக்கிறது
கல்லுாரி கனவு நிகழ்ச்சி திருப்பூரில் நாளை நடக்கிறது
ADDED : மே 09, 2024 04:18 AM
திருப்பூர் : பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்களின் உயர்கல்வி குறித்து தகவல்களை அறிந்து கொள்ள, பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வியாளர்களை கொண்டு, கல்லுாரி கனவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான நிகழ்ச்சி, திருப்பூர் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி பகுதி மாணவருக்கு அங்கேரிபாளையம், கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (10ம் தேதி), காலை, 9:00 முதல் மாலை, 3:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 13ம் தேதி, தெற்கு, பல்லடம், பொங்கலுார், காங்கயம் மாணவர்களுக்கு, ஜெய்வாபாய் பள்ளியிலும், தாராபுரம், குண்டடம், மூலனுார், வெள்ளகோவில் மாணவர்களுக்கு, தாராபுரம், விவேகம் மேல்நிலைப்பள்ளியிலும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி மாணவர்களுக்கு, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரியிலும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அலுவலர், துறை வல்லுநர்கள் பங்கேற்று, உயர்கல்விக்கு என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பயனுள்ள இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தவறாமல் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.