/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தம்பதியர் உயிரைக் குடித்த பகை; கொலையாளி தானாகவே மாட்டிக்கொண்டது எப்படி?
/
தம்பதியர் உயிரைக் குடித்த பகை; கொலையாளி தானாகவே மாட்டிக்கொண்டது எப்படி?
தம்பதியர் உயிரைக் குடித்த பகை; கொலையாளி தானாகவே மாட்டிக்கொண்டது எப்படி?
தம்பதியர் உயிரைக் குடித்த பகை; கொலையாளி தானாகவே மாட்டிக்கொண்டது எப்படி?
ADDED : மார் 15, 2025 12:25 AM

அவிநாசி; நீண்ட நாள் பகை, அவிநாசி அருகே தம்பதியரின் கொலைக்கு காரணமாக அமைந்தது. கொலையாளி, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தப்பியதும், விபத்தில் சிக்கியதால் தானாகவே சிக்கிக்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
அவிநாசி அடுத்த துலுக்கமுத்துார் வரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 87. இவரது மனைவி பர்வதம், 75. இவர்களது பக்கத்து தோட்டத்தில் வசிப்பவர் ரமேஷ், 45. பனியன் நிறுவனத்தில் டெய்லர்.
கடந்த 12ம் தேதி மாலை ரமேஷ் வீட்டில் இருக்கும் நாய்கள், கோழி, ஆடு ஆகியவை வீட்டிற்குள் வருவதாக கூறி பர்வதம், ரமேைஷ திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ், இரவில், பழனிசாமியையும், பர்வதத்தையும் வெட்டிக் கொலை செய்தார். ரமேைஷ போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது:
ரமேஷ் பத்து நாய்களை தோட்டத்தில் வளர்த்துள்ளார். முப்பதுக்கு மேற்பட்ட கோழிகள், ஆடுகள், காடைகளை யும் வளர்த்து வருகிறார். விருப்பப்பட்டால் வேலைக்கு செல்வது; கையில் பணம் கிடைத்தால் மது குடித்து விட்டு தோட்டத்தில் இருப்பது என இருந்துள்ளார். ரமேஷூக்கு திருமணமும் ஆகவில்லை.
பழனிசாமி தோட்டத்து வீட்டிற்கும் இவரது வீட்டிற்கும் நடுவில் ஆடுகள் மேய்ச்சல் விடுவதற்காக நடப்படும் கிழுவைச் செடிகளே வேலியாக இருந்துள்ளது.
கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் பழனிசாமி தோட்டத்து வீட்டிற்கு செல்வதும், நாய்கள் அதிக அளவில் உள்ளதால் இரவு நேரத்தில் குரைத்துக் கொண்டிருந்ததும், ரமேஷூடன், பழனிசாமி - பர்வதம் தம்பதியரின் பகை நீண்ட காலமாக முற்றியதற்குக் காரணமாக அமைந்தது. ரமேஷ் திருமணம் செய்துகொள்ளாததையும் ஏளனமாக தம்பதியர் திட்டி வந்துள்ளனர்.
பழனிசாமி வீட்டுக்கு போலீசார் சென்றதும் 'கொலை குறித்து வெளியில் தெரிந்து விட்டது. இதனால், மாட்டிக் கொள் வோம்' என பயந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்ற நோக்கத்துடன், சேலம் - கொச்சி பைபாஸில், 'ஒன்வே'யில் டூவீலரில் ரமேஷ் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த லாரி மீது டூவீலரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், வலது காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பின், சிகிச்சைக்கு வரும்போது விசாரணையில் குற்றவாளி எனத் தெரிந்து கைது செய்தோம். விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.