ADDED : ஜூன் 10, 2024 02:13 AM
திருப்பூர் - வஞ்சிபாளையம் ரயில் பாதையில் அணைப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலை ரயில் மோதியதில், 35 வயது மதிக்க பெண் மற்றும் 15 வயது சிறுவனின் பலியாயினர்.
இறந்தவர்கள் திருப்பூர், காலேஜ் ரோடு, சிறுபூலுவபட்டியை சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மனைவி தேவி, 33 மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இரண்டாவது மகன் அபூர்வ பிரகாஷ், 15 என்பது தெரிந்தது. இருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிந்தது.
போலீசார் கூறுகையில், ''இறந்த தேவி பல்வேறு உடல் பிரச்னைகளால் சிரமப்பட்டு வந்தார்.சமீபத்தில் கணவருடன் டூவீலரில் சென்ற போது தம்பதியர் விபத்தில் சிக்கினர். அதிலிருந்து மீண்டும் வரும் நிலையில், தேவிக்கு தொடர்ந்து உடல் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தன்னுடைய இரண்டாவது மகனை, தாய் அழைத்து கொண்டு தற்கொலை செய்தது தெரிந்தது''என்றனர்.