/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்புள்ள மனிதர்களாக உருவாக்குவதே விருப்பம்
/
பண்புள்ள மனிதர்களாக உருவாக்குவதே விருப்பம்
ADDED : செப் 16, 2024 12:11 AM

திருப்பூர் செட்டிபாளையத்தில் வசிப்பவர் டாக்டர் சரவணன்; சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர். இவரது மனைவி ஜெயப்பிரியா; மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரித்தல் நிபுணர்.
டாக்டர் சரவணன்:
எங்களுக்குத் திருமணம் முடிந்து, 13 ஆண்டுகள் கழித்துத்தான், அஸ்வத் பூர்ணன், அனிருத் ஜெய் ஆகியோர் பிறந்தனர். தாமதமாக குழந்தை பிறந்ததால், 'குழந்தை தான் நமக்கு முக்கியம், மற்ற அனைத்தும் பிறகுதான்' என்று தெளிவாக முடிவு செய்தோம். காலையில், ஒரு மணி நேரம் 'ஜிம்'முக்கு சென்று, உடற்பயிற்சி செய்வர்.
பள்ளிக்கு நானே தினமும் அழைத்து சென்று வருகிறேன். பிறகுதான், இருவரும் எங்கள் வேலையை பார்ப்போம்.
டாக்டர் ஜெயப்பிரியா:
கர்நாடக சங்கீத பயிற்சி, திருவாசகம் பண்ணிசை போன்ற பயிற்சிகளும் அவ்வப்போது அளிப்போம். வழிபாடு முறைகளையும் கற்பித்துள்ளோம். குழந்தை பிறந்த போதுதான், டி.ஜி.ஓ., படிப்பை துவக்கினேன்.
இரண்டு ஆண்டுகள், குழந்தைகளை எனது பெற்றோர் பராமரித்தனர்.குழந்தைகளை பிரிந்து இருந்தால், அரவணைப்பும், பாசமும் இல்லாமல் போகும் என்பதை அப்போது உணர்ந்தேன்.
எந்நிலை வந்தாலும் ஹாஸ்டலில் விடாமல், நாமே பராமரிக்க வேண்டும். டாக்டர் மகன் டாக்டராக வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை.
நல்ல பண்புள்ள மனிதராக உருவாக்க வேண்டும் என விரும்புகிறோம். எதிர்காலத்தை, அவர்கள் முடிவு செய்யும் அளவுக்கு திறமையானவராக வளர்ப்போம். இதற்காக, எங்கள் பணிகளை கூட, அவ்வப்போது விட்டுக்கொடுக்கதயங்குவதில்லை.
குழந்தை வளர்ப்பில், முதல் 10 ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டம்; கண்ணும்,கருத்துமாக வளர்க்க வேண்டுமென, என்னிடம் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளிடமும் தெளிவாக கூறி வருகிறேன்.

