sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சகோதரர் கொலையை மறைக்க நடந்த நாடகம்; மதியம் முதல் நள்ளிரவு வரை அரங்கேறிய திக்... திக் காட்சிகள்

/

சகோதரர் கொலையை மறைக்க நடந்த நாடகம்; மதியம் முதல் நள்ளிரவு வரை அரங்கேறிய திக்... திக் காட்சிகள்

சகோதரர் கொலையை மறைக்க நடந்த நாடகம்; மதியம் முதல் நள்ளிரவு வரை அரங்கேறிய திக்... திக் காட்சிகள்

சகோதரர் கொலையை மறைக்க நடந்த நாடகம்; மதியம் முதல் நள்ளிரவு வரை அரங்கேறிய திக்... திக் காட்சிகள்

1


ADDED : பிப் 24, 2025 12:58 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; சகோதரர் கொலையை மறைக்க, மதியம் முதல் நள்ளிரவு வரை 'ஐடியா'வுடன் கொலையாளி மேற்கொண்ட திக்... திக் செயல்கள், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளன.

அவிநாசி அடுத்த கருவலுார் அருகே காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 54; பனியன் நிறுவன மேலாளர். இவரது சித்தப்பா மகன் ரமேஷ், 43. கடந்த 19ம் தேதி அவிநாசியில் ரமேைஷ கோவிந்தசாமி சந்தித்தார். இருவரும் இடையே நடந்த கைகலப்பில், ரமேஷ் தள்ளிவிட்டதில், கோவிந்தசாமி பலியானார். கோவிந்தசாமியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பகுதியை தொரவலுார் குளத்திலும், தலை பகுதியை அனந்தகிரி பகுதியில் உள்ள கிணற்றிலும் ரமேஷ் வீசினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரமேைஷ கைது செய்தனர். உடல் மற்றும் தலை பகுதிகளை கைப்பற்றினர். இருப்பினும், கை, கால், தொடை பகுதிகள் கிடைக்கவில்லை. கால் பாதங்கள் மட்டும் நேற்று கிடைத்தது.

மொபைல்போன் சிக்னலை

வைத்து கண்டறிந்த போலீஸ்

கடந்த 19ம் தேதி கோவிந்தசாமி, ரமேஷின் வீட்டுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். கடந்த 20ம் தேதி, கோவிந்தசாமி மகன் பிரவீன்குமார், அவிநாசி போலீசாரிடம் தந்தையைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.

ரமேஷிடம் விசாரித்தபோது தனது வீட்டிற்கு வந்த அண்ணன் மீண்டும் திரும்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளார். கோவிந்தசாமியின் மொபைல் போன் எண்ணின் சிக்னலை வைத்து விசாரித்தபோது, ரமேஷ் வசிக்கும் பகுதியில், கடந்த 19ம் தேதி கோவிந்தசாமியின் மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் ரமேஷிடம் துருவி துருவி விசாரித்தனர்.

கோவிந்தசாமியிடம் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டதாகவும், கோவிந்தசாமி தன்னிடம் இல்லை என மறுத்ததால் சொத்தைப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். இதில் கைகலப்பு ஏற்பட்டதில், கோவிந்தசாமியை அடித்து கீழே தள்ளியதில் சுவரில் தலை மோதி கோவிந்தசாமி பலியாகியுள்ளார்.

வெட்டிய உடல் பாகங்களுடன்

25 கி.மீ., டூவீலரில் பயணம்

சம்பவம் நடந்த போது மதிய நேரம்; ரமேஷின் மனைவி தனியார் பள்ளி ஆசிரியை; மகள் பள்ளியில் படிக்கிறார். இருவரும் வருவதற்குள் உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டார். சாக்கு பையில் கோவிந்தசாமியின் உடலை கட்டி, அனந்தகிரியில் உள்ள கோழிப்பண்ணைக்கு எடுத்துச்சென்றார்.

வெட்டிய உடல் பாகங்களை வெவ்வேறு பகுதியில் வீசி விட்டால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். சுமார் 25 கி.மீ., நள்ளிரவு டூவீலரில் கொண்டுசென்று உடல்பாகங்களை வீசியுள்ளார்.

கைகள், கால்கள் போன்றவை கிடைக்காததால், பிரேத பரிசோதனை முடிந்து உடலை தந்தாலும் ஈமச்சடங்கு செய்ய முடியாத சூழலில் கோவிந்தசாமியின் குடும்பத்தினர் உள்ளனர்.

---

கோவிந்தசாமியின் உடல் பாகங்களை, ரமேஷின் தோட்டத்துப் பகுதியில் போலீசார் தேடியபோது கூடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.

'பைனான்சியர்கள் கடத்திட்டாங்க'

கொலை செய்த பின் எஸ்.எம்.எஸ்.,ரமேஷ் கோவிந்தசாமியின் மொபைல்போனில் இருந்து கோவிந்தசாமியின் மகன் பிரவீன்குமாருக்கு, ''எனக்கு கடன் பிரச்னை உள்ளது. நண்பருக்கு ஜாமின் போட்டு ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொடுத்தேன்; 70 லட்சம் ரூபாயைச் செலுத்தாததால் பைனான்சியர்கள் கடத்திச்சென்றுவிட்டனர். வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராதீர்கள். தோட்டத்திற்குச் செல்லாதீர்கள்; என்னை தேட வேண்டாம்; பணம் 70 லட்சம் ரூபாய் தயார் செய்யுங்கள். தயார் செய்ததும் வீட்டில் பச்சைக்கொடி கட்டுங்கள். பணம் தயாராக உள்ளது என்று அப்போதுதான் பைனான்சியர்களுக்குத் தெரியும். என்னை விட்டுவிடுவார்கள்; நான் வந்து நகை, சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை விற்று பணத்தை வாங்கி பைனான்சியர்களுக்கு செட்டில் செய்து விடுகிறேன். உடனடியாக சித்தப்பா ரமேஷிற்கு தகவல் அளித்து பணத்தை தயார் செய்யுங்கள்; போலீசுக்கோ வேறு யாருக்குமோ தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' என 'மெசேஜ்' அனுப்பியுள்ளார். தன்னை குற்றவாளியாக சந்தேகிக்காமல் இருப்பார்கள் என்று நினைத்து ரமேஷ் செயல்பட்டதே, அவர் சிக்கியதற்குக் காரணமாக அமைந்தது.








      Dinamalar
      Follow us