/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வெழுதாத 1,356 பேரை தேடும் கல்வித்துறையினர்
/
தேர்வெழுதாத 1,356 பேரை தேடும் கல்வித்துறையினர்
ADDED : மே 06, 2024 11:15 PM
திருப்பூர்;'தொடர்ந்து கற்போம்' திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு வராத, 1,356 மாணவர்களை தேடும் பணியை மாவட்ட கல்வித்துறை துவக்கியுள்ளது.
பள்ளிக்கு வராத, பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை வழங்க 'தொடர்ந்து கற்போம்' திட்டம் கல்வித்துறையால், ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மற்றும் பள்ளிக்கு வராத, தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வாராந்திர தேர்வு நடத்தி, ஜூன் அல்லது ஜூலையில் நடக்க போகும் துணைத்தேர்வுக்கு தயார்படுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 30 ஆயிரத்து, 620 பேர் எதிர்கொண்டனர். இவர்களில், 1,356க்கும் மேற்பட்டோர் மொழித்தாள் உள்ளிட்ட பிற தேர்வுக்கு வரவில்லை. இவர்கள் ஏன் தேர்வுக்கு வரவில்லை, தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வர செய்வதற்கான முயற்சிகளையும், சிறப்பு வகுப்புகளில் இணைப் பதற்கான செயல்திட்டங்களையும், மாவட்ட கல்வித்துறை எடுத்து வருகிறது.