/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிக்கு 'கரம்' கொடுத்த சக்ஷம்
/
மாற்றுத்திறனாளிக்கு 'கரம்' கொடுத்த சக்ஷம்
ADDED : பிப் 22, 2025 07:11 AM

திருப்பூர்; அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அருண்பிரசாத், 36. கடந்த 15 ஆண்டுகள் முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி, கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல்படாத நிலையில் படுக்கை நிலை மாற்றுத்திறனாளியாகிவிட்டார்.
ஆதார் கார்டு இல்லாததால், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகைகூட பெறமுடியவில்லை. தகவல் தெரிந்த சக் ஷம் அமைப்பினர், கடந்த இரு மாதங்கள் முன்னர் பழனிசாமி - பொன்னம்மாள் அறக்கட்டளை நடத்திவரும் ஆம்புலன்ஸில் அருண்பிரசாத்தை அழைத்துவந்து, ஆதார் பதிவு செய்தனர்.
நேற்று, இலவச ஆம்புலன்சில், கலெக்டர் அலுவலகத்துக்கு அருண்பிரசாத்தை அழைத்துவந்து கனரா வங்கியில் வங்கி கணக்கு துவங்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முகாமில் பங்கேற்கச் செய்து, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பதிவு செய்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மேலும் பஸ், ரயில் பாஸ், மாற்றுத்திறனாளியின் உறவினருக்கு பராமரிப்பு உதவித் தொகைக்கு சக் ஷம் சார்பில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது.