/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதே முதல் கடமை! தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பேச்சு
/
மக்கள் பிரச்னையை தீர்ப்பதே முதல் கடமை! தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பேச்சு
மக்கள் பிரச்னையை தீர்ப்பதே முதல் கடமை! தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பேச்சு
மக்கள் பிரச்னையை தீர்ப்பதே முதல் கடமை! தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பேச்சு
ADDED : ஏப் 18, 2024 05:11 AM

உடுமலை, உடுமலையில், தி.மு.க., பொள்ளாச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
உடுமலை நகரச்செயலாளர் வேலுசாமி பேசுகையில், ''வெற்றி உறுதி செய்யப்பட்டாலும், ஓட்டுப்பதிவு முடியும் வரை, மூன்று நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்றார்.
வேட்பாளர் ஈஸ்வரசாமிபேசியதாவது:
கடந்த, 20 நாட்களாக தொகுதி முழுவதும் மக்களிடம் ஆதரவு கேட்டும், தேர்தல் வாக்குறுதிகள் அளித்தும் பிரசாரம் மேற்கொண்டோம். உடுமலை மூணாறு, திருமூர்த்திமலை, அமராவதி சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் நகர நெரிசலுக்குள் வராமல், வட்டச்சாலை அமைக்கப்படும். உடுமலை - திருப்பூர் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.
அமராவதி சர்க்கரை ஆலை நவீனப்படுத்தவும், ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பித்து, சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாக அதிகளவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறு சட்டசபை தொகுதியிலும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. நான் வெற்றி பெற்றதும், இரு சட்டசபை தொகுதிக்கு ஒரு எம்.பி., அலுவலகம் திறக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதுவே, எனது முதல் கடமையாகும்.
'டில்லிக்கு ராஜாவானாலும், பெற்றவர்களுக்கு பிள்ளை தான்' என்பதை போல், எங்கு சென்றாலும், தொகுதிக்குள் ஏதாவது பிரச்னை என்றால், ஓடி வந்து மக்களோடு மக்களாக நிற்பேன். சட்டசபை தொகுதிக்கு கூடுதல் நிதி, வளர்ச்சிப்பணிகள் செய்யப்படும். வெற்றி பெற்றால், என்றும் தொகுதி மக்களுடனும், மக்கள் மனதிலும் இருக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும்.
இவ்வாறு, பேசினார்.

