/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை கவர்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
/
மக்களை கவர்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
ADDED : செப் 11, 2024 01:18 AM
திருப்பூர்;திருப்பூரில் நேற்று நடைபெற்ற வண்ணமயமான விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன ஊர்வலத்தை பொதுமக்கள் பல்வேறு இடங்களில் பார்த்து மகிழ்ந்தனர்.
ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூரில் மொத்தம், 1,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நான்கு நாள் சிறப்பு பூஜை வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் என நடந்தது. விசர்ஜன ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு - வெள்ளியங்காடு, மங்கலம் ரோடு - கே.வி.ஆர்., நகர் என மூன்று இடங்களில் இருந்து துவங்கியது.
புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை குமரன் டிம்பர்ஸ் ஈஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அணி வகுத்து, பல்வேறு வீதிகள் வழியாக பொதுகூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தது. மூன்றாவதாக செல்லம்நகரில் துவங்கிய ஊர்வலத்தில் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி துவக்கி வைத்தார்.
கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ், மேற்கு மாநகர பொது செயலாளர் வெங்கடேஷ், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தாராபுரம் ரோட்டில் நடந்த ஊர்வலத்தை, மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகானந்தன் துவக்கி வைத்தார்.
இதில், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி, ஹிந்து முன்னணி மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், பா.ஜ., மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் சென்ற அனைத்து பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு, ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
விசர்ஜன ஊர்வலத்தையொட்டி மாநகரில் பல இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உட்பட ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனம், வாடகை கார்கள் மூலமாக போலீசார் ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.