/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறக்கி விடப்பட்ட பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
/
இறக்கி விடப்பட்ட பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
ADDED : ஆக 22, 2024 12:34 AM

பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்டில், பெண் ஒருவர், சூலுார் செல்வதற்காக தனியார் பஸ்ஸில் ஏறினார்.
பஸ்சில் அமர்ந்த பின், 'சூலுார் செல்லாது; இறங்கு' என்றார் நடத்துனர்.
'ஏன் செல்லாது?' என திருப்பிக்கேட்டார் அந்தப் பெண். நடத்துனர் பதில் சொல்லாததால், பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், கீழே இறக்கிவிடப்பட்டார்.
அந்த பெண் கூறுகையில், ''புறநகர் செல்லும் பெரும்பாலான பஸ்களில், வழித்தடங்களில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளை அனுமதிப்பதில்லை. கோவை செல்லும் பஸ் என்றால், கோவை செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றுகின்றனர். குறிப்பாக, காலை நேரத்தில் இச்செயல் அதிகளவு நடக்கிறது. வழித்தட ஊர்களுக்கு செல்பவர்கள் எப்படி செல்வது? அனைத்து தரப்பு பயணிகளையும் பஸ்சில் ஏற்ற வேண்டும்'' என்றார்.